கிறிஸ்துமஸ் பண்டிகை: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து


கிறிஸ்துமஸ் பண்டிகை: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
x

இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

சென்னை,

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு தலைவர்கள், அதிகாரிகள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், கிறிஸ்துமஸை முன்னிட்டு, கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

”கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்! ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையும், போதனைகளும் அன்பு, இரக்கம் மற்றும் மன்னிப்பு ஆகிய காலத்தால் அழியாத மதிப்புகளைப் பேண நம்மைத் தொடர்ந்து ஊக்குவிக்கின்றன.

இந்த புனிதமான பண்டிகை அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் வெற்றியைக் கொண்டு வரட்டும், அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் இணக்கமான சமூகத்திற்கான நமது உறுதிப்பாட்டை வலுப்படுத்தட்டும். மேலும் 2047 ஆம் ஆண்டுக்குள் வலுவான மற்றும் வளமான விக்சித் பாரதத்தை உருவாக்குவதற்கு அதிக பங்களிப்புகளை ஊக்குவிக்கட்டும்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story