தவெக சார்பில் கிறிஸ்துமஸ் விழா: கியூ.ஆர். குறியீட்டுடன் கூடிய சீட்டு உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாமல்லபுரத்தில் நாளை கிறிஸ்துமஸ் விழா நடைபெற உள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள போர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஓட்டலில் நாளை (திங்கள்கிழமை) கிறிஸ்துமஸ் விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்துகொண்டு பேசுகிறார். இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்கிறார்கள்.

இந்த விழாவில் கியூ.ஆர். குறியீட்டுடன் கூடிய அனுமதிச் சீட்டு உள்ளவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்று தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

மனிதநேய நல்லிணக்க மாண்பைப் போற்றும் விதமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் கலந்துகொள்ளும் சமத்துவக் கிறிஸ்துமஸ் விழா, நாளை (22.12.2025, திங்கள்கிழமை) காலை 10.30 மணிக்கு, மாமல்லபுரம் போர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஓட்டலில் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் சகோதர சகோதரிகளுக்கு கியூ.ஆர். குறியீட்டுடன் கூடிய அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ளதால் அவர்கள் மட்டுமே கலந்துகொள்வார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com