கிறிஸ்துமஸ் விழா

பாளையங்கோட்டை டக்கரம்மாள்புரம் சி.எஸ்.ஐ.ஜெயராஜ் அன்னபாக்கியம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.
கிறிஸ்துமஸ் விழா
Published on

இட்டமொழி:

பாளையங்கோட்டை டக்கரம்மாள்புரம் சி.எஸ்.ஐ.ஜெயராஜ் அன்னபாக்கியம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. நெல்லை திருமண்டல மேல்நிலைப்பள்ளிகளின் மேலாளர் குருவானவர் சுதர்சன் தலைமை தாங்கினார். பேரின்பபுரம் சேகரத்தலைவர் ஜான் செல்வின் ஆரம்ப ஜெபம் செய்தார். பள்ளி தாளாளர் தேவா காபிரியல் ஜெபராஜன் வரவேற்றார். நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசினார்.

நெல்லை திருமண்டல பேராயர் ஏ.ஆர்.ஜி.எஸ்.டி.பர்னபாஸ் கிறிஸ்துமஸ் செய்தி வழங்கி காபிரியேல் ஜெபராஜன் நினைவு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். விழாவில் நெல்லை திருமண்டல உபதலைவர் டி.பி.சுவாமிதாஸ், துணை போலீஸ் சூப்பிரண்டு பர்னபாஸ், தொழிலதிபர்கள் சாமுவேல், விக்கி, பேரின்பபுரம் ஜோசப், சி.எஸ்.ஐ. மெட்ரிக் பள்ளி முதல்வர் ஜெரின், எஸ்.டி.சி.பிரைமரி பள்ளி முதல்வர் குணசீலி பர்னபாஸ், மாநகராட்சி கவுன்சிலர்கள் சுந்தர், நித்திய பாலையா, சென்னை ராஜலட்சுமி கல்லூரி டீன் ஜாய் வின்சி உள்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளி முதல்வர் உமா நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com