புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி

புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி நடந்தது.
புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி
Published on: 

வேளாங்கண்ணியை அடுத்த தெற்குப்பொய்கைநல்லூரில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் ஆண்டு திருவிழா கடந்த 27-ந்தேதி கொடியேற்றதுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மின் அலங்கார பெரிய தேர்பவனி நேற்று நடைபெற்றது. தேர்பவனியை வேளாங்கண்ணி பேராலய அதிபர் இருதயராஜ் புனிதம் செய்து தொடங்கி வைத்தார். தேர்பவனி ஆலையத்திலிருந்து முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதையொட்டி வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக பேராலய பங்குத்தந்தை அற்புதராஜ் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com