சினிமா பின்னணி பாடகி சின்மயி போலீசில் புகார்

சினிமா பின்னணி பாடகி சின்மயி போலீசில் புகார்: தனது கம்பெனி பெயரில், பெண் குழந்தைகள் படம் தவறாக சித்தரிப்பு.
சினிமா பின்னணி பாடகி சின்மயி போலீசில் புகார்
Published on

சென்னை,

பிரபல சினிமா பின்னணி பாடகி சின்மயி, சென்னை ஆழ்வார்பேட்டை உள்ள ஜானகி அவென்யூவில் வசிக்கிறார். இவரது கணவர் பெயர் ராகுல் ரவீந்திரன். சின்மயி, அபிராமபுரம் போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

நானும், எனது கணவரும் போட்டோ ஷூட் கம்பெனி நடத்தி வருகிறோம். எங்களது கம்பெனி பெயரை பயன்படுத்தி, குறிப்பிட்ட செல்போன் நம்பரில் இருந்து, பெண் குழந்தைகளின் படத்தை தவறாக சித்தரித்து ஒருவர் வெளியிட்டு வருகிறார். இது எங்கள் கம்பெனியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com