கம்பத்தில் சினிமா தியேட்டர் முற்றுகை

கம்பத்தில் சினிமா தியேட்டரை முற்றுகையிட்ட பார்வர்டு பிளாக் கட்சியினர் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
கம்பத்தில் சினிமா தியேட்டர் முற்றுகை
Published on

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் ஆகியோர் நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் இன்று (வியாழக்கிழமை) வெளிவருகிறது. இந்த திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க கோரி பார்வர்டு பிளாக் கட்சியினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அவர்கள் படத்துக்கு தடை விதிக்க கோரி போஸ்டர்களை ஒட்டி உள்ளனர்.

இந்தநிலையில் நேற்று கம்பத்தில் தெற்கு போலீஸ்நிலையம் எதிரில் உள்ள சினிமா தியேட்டரை அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நகர பொதுச்செயலாளர் அறிவழகன் தலைமையில் கட்சியினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று நகர பொதுச்செயலாளர் அறிவழகன், ஒன்றிய செயலாளர் மகேஸ்வரன் உள்பட 11 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com