அரசு வீடுகளை வாடகைக்கு விட்டு முறைகேடு மத்திய அரசு ஊழியர்கள் 16 பேர் உள்பட 35 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு

சென்னையில் அரசு குடியிருப்பு வீடுகளை வாடகைக்கு விட்டு முறைகேட்டில் ஈடுபட்டதாக 16 மத்திய அரசு ஊழியர்கள் உள்ளிட்ட 35 பேர் மீது சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அரசு வீடுகளை வாடகைக்கு விட்டு முறைகேடு மத்திய அரசு ஊழியர்கள் 16 பேர் உள்பட 35 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு
Published on

சென்னை,

சென்னை கே.கே.நகரில் மத்திய அரசு ஊழியர்கள் குடியிருப்பு உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. மத்திய அரசு அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை இங்கு குறைந்த வாடகைக்கு குடி இருக்கிறார்கள்.

இங்கு குடியிருக்கும் மத்திய அரசு ஊழியர்கள், தாங்கள் குடியிருக்கும் வீடுகளை முறைகேடாக வாடகைக்கு விட்டு பணம் சம்பாதிப்பதாக புகார்கள் வந்தன.

இது தொடர்பாக சி.பி.ஐ. போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தினார்கள். விசாரணை முடிவில், முறைகேடுகள் நடந்திருப்பது உண்மை என்று தெரிய வந்தது.

இதை தொடர்ந்து வாடகைக்கு விட்டு முறைகேட்டில் ஈடுபட்ட மத்திய அரசு ஊழியர்கள் 16 பேர் உள்ளிட்ட 35 பேர் மீது சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com