ஊதியூர் வனப்பகுதியில் பதுங்கி இருக்கும் சிறுத்தை சிக்குமா?

ஊதியூர் வனப்பகுதியில் பதுங்கி இருக்கும் சிறுத்தை சிக்குமா? என தெரியவில்லை. அதை பிடிப்பது குறித்து கணேசமூர்த்தி எம்.பி., வனத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.
ஊதியூர் வனப்பகுதியில் பதுங்கி இருக்கும் சிறுத்தை சிக்குமா?
Published on

ஊதியூர் வனப்பகுதியில் பதுங்கி இருக்கும் சிறுத்தை சிக்குமா? என தெரியவில்லை. அதை பிடிப்பது குறித்து கணேசமூர்த்தி எம்.பி., வனத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

சிறுத்தை

ஊதியூர் வனப்பகுதிக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வந்த ஒரு சிறுத்தை மலையடிவாரப் பகுதியில் உள்ள தோட்டங்களுக்கு புகுந்து அங்கிருந்த ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி வந்தது. இதையடுத்து காங்கயம் வனத்துறையினர் ஊதியூர் மலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக எச்சரிக்கை பதாகைகள் பல்வேறு இடங்களில் வைத்து சிறுத்தையை கண்காணித்து வந்தனர். மேலும் வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்கள், கூண்டுகள், ட்ரோன்கள் கேமராக்கள் உள்ளிட்டவைகளை வைத்தும் தீவிரமாக தேடி வந்தனர்.

ஆனால் கண்காணிப்பு கேமராக்களில் சிறுத்தை பதிவாகாமலும், கூண்டுகளில் சிக்காமலும், வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்தது. இந்தநிலையில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சிறுத்தையை பார்த்ததாக தகவல் தெரிவித்து வந்தனர். இதையடுத்து தகவல் தெரிவித்த இடங்களுக்கு சென்ற வனத்துறையினர் சிறுத்தையின் கால் தடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். சில நாட்களுக்கு முன்பு மலையடிவார பகுதியில் சிறுத்தை மீண்டும் தன் வேட்டையை தொடங்கியது. ஊதியூர் - காசிலிங்கம் பாளையம் சாலை பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் கட்டியிருந்த நாயை சிறுத்தை தூக்கி சென்றது. ஊதியூர் வனப்பகுதியில் இன்னும் சிறுத்தை பதுங்கி இருப்பது உறுதி செய்யப்பட்டது.

ஆய்வுக் கூட்டம்

எனவே சிறுத்தை நடமாட்டம் தொடர்பான ஆய்வு கூட்டம் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், மா.மதிவேந்தன் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து ஊதியூர் வனப்பகுதியில் வைத்திருக்கும் கூண்டுகளை ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் 4 நாட்களாக சிறுத்தை குறித்த எந்த தகவலும் கிடைக்க வில்லை.

இந்த நிலையில் ஈரோடு கணேசமூர்த்தி எம்.பி., ஊதியூர் பகுதிக்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் சிறுத்தையை விரைவாக பிடிக்க அமைச்சர்களிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். அப்போது ம.தி.மு.க. காங்கயம் நகர செயலாளர் ஏ.சி.வெங்கடேஷ், காங்கயம் வனத்துறை அலுவலர் தனபாலன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், வனத்துறை ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com