சி.ஐ.டி.யு. ஆட்டோ ஓட்டுனர்கள் சங்க கூட்டம்

நெல்லையில் சி.ஐ.டி.யு. ஆட்டோ ஓட்டுனர்கள் சங்க கூட்டம் நடந்தது.
சி.ஐ.டி.யு. ஆட்டோ ஓட்டுனர்கள் சங்க கூட்டம்
Published on

நெல்லை மாவட்ட சி.ஐ.டி.யு. ஆட்டோ ஓட்டுனர்கள் சங்க நிர்வாகக்குழு கூட்டம் குறிச்சியில் உள்ள சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. சங்க மாவட்ட தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் முருகன், சி.ஐ.டி.யு. மாநிலக்குழு உறுப்பினர் பெருமாள் ஆகியோர் பணிகள் குறித்து பேசினர்.

கூட்டத்தில், ஆட்டோ தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ மருத்துவ காப்பீடு வசதிகள் செய்து தர வேண்டும். ஆட்டோ தொழிலை பாதுகாக்க கேரளாவை போல் தமிழகத்திலும் ஆட்டோ தொழிலாளர்களுக்காக தனி செயலி உருவாக்க வேண்டும். புதிய மோட்டார் வாகன சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தக்கூடாது. ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இலவச வீடு கட்டித்தர வேண்டும். ஆட்டோக்களுக்கு பெட்ரோல் அல்லது டீசல் தினமும் 5 லிட்டர் மானிய விலையில் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 27-ந் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டத்திலும் 1,000 ஆட்டோ தொழிலாளர்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும். வரும் 25-ந் தேதி நடைபெறும் சி.ஐ.டி.யு. நெல்லை மாவட்ட மாநாட்டில் ஆட்டோ தொழிலாளர்கள் திரளாக பங்கேற்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முடிவில் ஆட்டோ சங்க மாவட்ட பொருளாளர் வலதிபெருமாள் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com