நெல்லையில் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்


நெல்லையில் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்
x

திமுக தேர்தல் வாக்குறுதியின்படி பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த கோரி நெல்லையில் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி

ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 25 மாதங்களுக்கான ஒய்வு கால பணபலன்களை பாக்கியின்றி வழங்க கோரியும், திமுக தேர்தல் வாக்குறுதியின்படி பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த கோரியும் திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியு திருநெல்வேலி மாவட்ட தலைவர் முருகன் தலைமை வகித்தார். சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் மோகன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அரசு போக்குவரத்து தொழிலாளர் சம்மேளன மாநில பொதுச்செயலாளர் ஆறுமுகநயினார் மற்றும் சிஐடியு அகில இந்திய செயலாளர் கருமலையான் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர். மேலும் சிஐடியு திருநெல்வேலி மாவட்ட செயலாளர் சரவணபெருமாள், மாவட்ட பொருளாளர் ராஜன் மற்றும் நிர்வாகிகள் பீர்முகம்மதுஷா, ஜோதி, ராஜகோபால், மாரியப்பன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். சிஐடியு மாநில உதவி தலைவர் செண்பகம் ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசினார்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் சங்கிலிபூதத்தார், விநாயகர், ராமர், செந்தில், இசக்கிமுத்து மற்றும் மின்சார ஊழியர்கள், அரசு விரைவு போக்குவரத்து, ATC, பஞ்சாலை, மருந்து விற்பனை சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர். சிஐடியு அரசு போக்குவரத்து சங்க திருநெல்வேலி மாவட்ட தலைவர் காமராஜ் நன்றி கூறினார்.

1 More update

Next Story