ஜெயலலிதாவின் மகள் என உரிமைக் கோரும் அம்ருதாவின் மனுவை தள்ளுபடி செய்ய கோரி ஜெ.தீபா பதில் மனு

ஜெயலலிதாவின் மகள் என உரிமைக் கோரும் வழக்கில் அம்ருதாவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ஜெ.தீபா பதில் மனு தாக்கல் செய்துள்ளார். #JDeepa #TamilNews
ஜெயலலிதாவின் மகள் என உரிமைக் கோரும் அம்ருதாவின் மனுவை தள்ளுபடி செய்ய கோரி ஜெ.தீபா பதில் மனு
Published on

சென்னை

ஜெயலலிதாவின் மகள் என தன்னை அறிவிக்கக் கோரியும், தனக்கு மரபணு சோதனை செய்ய உத்தரவிடக் கோரியும், ஜெயலலிதாவுக்கு வைஷ்ணவ முறைப்படி இறுதி சடங்கு செய்ய கோரியும் உத்தரவிடுமாறு அம்ருதா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவை நிராகரித்த நீதிபதிகள் சென்னை ஐகோர்ட்டில் உரிய ஆவணங்களுடன் தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தினர். இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் அம்ருதா மனு தாக்கல் செய்தார். அப்போது ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்தால் என்ன என்று நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார். இந்த நிலையில் இந்த வழக்கு நாளை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அம்ருதா என்பவர் ஜெ.வின் மகள் என்று கூறுவது சொத்துக்காகத்தான். அம்ருதா மோசடி பேர் வழி என்பதால் அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தீபா கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com