சென்னை புழல் ​சிறையில் கைதிகளிடையே மோதல் - ஒருவர் படுகாயம்

காயமடைந்த இம்மானுவேலை சிறைக்காவலர்கள் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சென்னை புழல் ​சிறையில் கைதிகளிடையே மோதல் - ஒருவர் படுகாயம்
Published on

சென்னை,

சென்னை புழல் மத்திய சிறையில் விசாரணைப் பிரிவில் அடைக்கப்பட்டிருந்த கொலை வழக்கு கைதி இம்மானுவேல் மற்றும் திருட்டு வழக்கு கைதி சந்துரு ஆகிய இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சந்துரு, மறைத்து வைத்திருந்த பிளேடால் இம்மானுவேலின் முகத்தில் பலமாக தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த இம்மானுவேலை சிறைக்காவலர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். கைதியின் கையில் பிளேடு எப்படி கிடைத்தது? எதனால் கைதிகளிடையே மோதல் ஏற்பட்டது? என்பது குறித்து புழல் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com