கூவத்தூர் அருகே இருதரப்பினரிடையே மோதல்; 4 பேர் கைது

கூவத்தூர் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கூவத்தூர் அருகே இருதரப்பினரிடையே மோதல்; 4 பேர் கைது
Published on

வாக்குவாதம்

செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் அடுத்த காத்தான் கடை சாலை சந்திப்பில் கடலூர் சின்னகுப்பம் மீனவர்கள் கடந்த 2 நாட்ளுக்கு முன்பு மினி லாரியில் படகை ஏற்றிக்கொண்டு கடலூர் சாலையில் சென்றனர். அப்போது லாரியின் இன்டிகேட்டர் விளக்கை ஒளிர வைக்காமல் திரும்பியதாக மோட்டார் சைக்கிளில் வந்த கூவத்தூர் பகுதியை சேர்ந்த சூர்யா (வயது 26) என்பவர் சின்னகுப்பம் மீனவர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது ஏற்பட்ட கைகலப்புக்கு பின்னர் சின்னகுப்பம் மீனவர்கள் அங்கிருந்து லாரியில் சென்றுவிட்டனர். காத்தான்கடை பகுதியில் நடந்த தகராறு குறித்து சூர்யா தனது உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு தகவல் தெரிவித்தார். இதைடுத்து காத்தான் கடை சந்திப்பில் 15-க்கும் மேற்பட்டோர் திரண்டு, கடலூர் மீனவர் குப்பத்தை சேர்ந்த அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் ஜெய்சங்கர் உட்பட கடலூர் குப்பம் மீனவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து கடலூர்குப்பம் மீனவர்கள், கவுன்சிலர் ஜெய்சங்கர் மற்றும் கூவத்தூர் பகுதியினர் என 3 தரப்பினரும் கூவத்தூர் போலீசில் புகார் அளித்தனர்.

கைது

இந்த மோதல் குறித்து கூவதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரவீன்டோனி மற்றும் போலீசார் கூவத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சகாதேவன் உட்பட 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் கடலூர் சின்னகுப்பம் பகுதியை சேர்ந்த தினகரன் (வயது 30), ஞானசேகரன் (60), மற்றும் கூவத்தூர் பகுதியை சேர்ந்த மூர்த்தி ( 40) விஜயகுமார் (30) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள நபர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com