சென்டிரல் எதிரே கல்லூரி மாணவர்கள் மோதல் - கத்திக்குத்து - 3 பேர் கைது

சென்டிரல் ரெயில் நிலையம் எதிரே மோதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்டிரல் எதிரே கல்லூரி மாணவர்கள் மோதல் - கத்திக்குத்து - 3 பேர் கைது
Published on

சென்னை,

சென்னை யானைக்கவுனியை சேர்ந்தவர் ராகேஷ் ஆனந்த் (வயது 18). இவர், கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர், சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் எதிரே உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இன்னொரு கல்லூரியில் படிக்கும் 3 மாணவர்கள் ஆனந்துடன் மோதலில் ஈடுபட்டனர்.

நடுரோட்டில் நடந்த அடிதடி மோதலில் ஆனந்த் கத்தியால் குத்தப்பட்டார். அவரை கத்தியால் குத்திய 3 மாணவர்களும் தப்பி ஓடிவிட்டனர். கத்திக்குத்தில் காயமடைந்த ஆனந்த், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக பெரியமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தப்பியோடிய கல்லூரி மாணவர்கள் பூபதி (19), விநாயகமூர்த்தி (20), ஆகாஷ் (19) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com