குலசேகரம் அருகே வடமாநில தொழிலாளர்கள் மோதல் - வாலிபர் அடித்துக்கொலை...!

குலசேகரம் அருகே வடமாநில தொழிலாளர்கள் மோதலில் வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
கொலையாளி அனில் பர்மன் 
கொலையாளி அனில் பர்மன் 
Published on

திருவட்டார்,

குமரி மாவட்டம் குலசேகரம் பகுதியை சேர்ந்தவர் சோபிதராஜ்(வயது40). இவர் சித்திரங்கோடு பகுதியில் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். இவர் கம்பெனியில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் இங்கு பணிபுரிந்து வரும் அசாம் மாநிலத்தை சேர்ந்த சோம்போ விஷ்வாஸ்(30), அனில் பர்மன் (22) ஆகிய இரண்டு பேரும் ஒரு அறையில் இருந்தனர்.

இவர்கள் இருவரும் நேற்று இரவு 10 மணி அளவில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த அனில் பர்மன் ஜாக்கி கட்டையின் ராடை எடுத்து சோம்போ விஷ்வாசின் தலையில் அடித்துள்ளார். இதில் முகம் சிதைந்து சம்பவ இடத்திலேயே சோம்போ விஷ்வாஸ் உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவட்டார் போலீசார் விரைந்து வந்து உயிரிழந்த வடமாநில தொழிலாளி சோம்போ விஷ்வாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கொலையாளி அனில் பர்மனை போலீசார் கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com