

சென்னை,
2025-26ம் கல்வியாண்டுக்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.
அதன்படி, தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.31 சதவீத மாணவ-மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் பட்டியல்கள் (Provisional Mark Sheets) வரும் மே 22, 2026 முதல் விநியோகம் செய்யப்படவுள்ளன.
தங்களின் மதிப்பெண்களில் கூடுதல் சரிபார்ப்பு தேவைப்படும் மாணவர்கள் விடைத்தாள் நகல் (Answer Sheet Copy) பெற மே 22, 2026 முதல் மே 27, 2026 வரை விண்ணப்பிக்கலாம்.
விடைத்தாள் நகல் பெற்ற பிறகு, மறுமதிப்பீடு (Revaluation) அல்லது மறுமொத்தக் கூட்டலுக்கு (Re-totalling) விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் ஜூன் 17, 2026 முதல் ஜூன் 19, 2026 வரை அதற்கான கட்டணங்களைச் செலுத்தி விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேர்வில் தேர்ச்சி பெறாத அல்லது மதிப்பெண்களை உயர்த்த விரும்பும் மாணவர்களுக்கான தற்காலிக துணைத்தேர்வு (Supplementary Exam) ஜூலை 8, 2026 முதல் ஜூலை 15, 2026 வரை நடத்தப்படவுள்ளது.
இத்துணைத்தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மே 26, 2026 முதல் ஜூன் 9, 2026 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.