10, 12-ம் வகுப்பு துணைத் தேர்வு ஹால் டிக்கெட்: 20-ந்தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம் - தேர்வுத்துறை அறிவிப்பு

துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் தொடர்பான அறிவிப்பை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.
10, 12-ம் வகுப்பு துணைத் தேர்வு ஹால் டிக்கெட்: 20-ந்தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம் - தேர்வுத்துறை அறிவிப்பு
Published on

சென்னை,

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்தது. இதைத் தொடர்ந்து கடந்த மே மாதம் மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு துணை தேர்வு நடத்தப்படும் என அரசு அறிவித்தது.

இதன்படி தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் மற்றும் தேர்வுக்கு வருகை தராத மாணவர்கள் ஆகியோரை கண்டறிந்து, அவர்களுக்கு அந்ததந்த பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் தொடர்பான அறிவிப்பை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி 10 மற்றும் 12-ம் வகுப்பு துணைத் தேர்வு ஹால் டிக்கெட்டை வரும் 20-ந்தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com