12-ம் வகுப்பு துணைத்தேர்வு: இன்று முதல் ஹால்டிக்கெட் - தேர்வுத்துறை

12ம் வகுப்பு துணைத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
12-ம் வகுப்பு துணைத்தேர்வு: இன்று முதல் ஹால்டிக்கெட் - தேர்வுத்துறை
Published on

சென்னை,

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியான நிலையில், தேர்வில் தோல்வியடைந்தவர்கள் மற்றும் தேர்வை எழுதாதவர்களுக்கு துணைத்தேர்வு நடத்தப்பட உள்ளது. அதன்படி, 12-ம் வகுப்பு துணைத்தேர்வு ஜூலை 25-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த நிலையில், 12-ம் வகுப்பு துணைத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை இன்று (20.07.2022) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று தங்கள் விவரங்களை பயன்படுத்தி ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்' என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com