8ஆம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள் பிப்.1ஆம் தேதி வெளியீடு - தேர்வுத்துறை அறிவிப்பு

8ஆம் வகுப்பு தனித்தேர்வு எழுதியவர்களுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழகத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை நடைபெற்ற தனி தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள் வரும் 1-ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இதன்படி, 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் பிப்ரவரி 1-ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் முடிவுகளை அறிந்துகொள்ளலாம் என்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com