

சென்னை,
கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை தொடர்ந்து தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை படிப்படியாக அளித்து வந்தது. இதன்படி பள்ளிகள், கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டன.
முதல் கட்டமாக ஒன்பதாம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், கடந்த நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான வகுப்புகள் திறக்கப்பட்டது. இதற்கிடையே தீபாவளி விடுமுறை மற்றும் தொடர் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விடுமுறை நாட்களை ஈடுகட்ட அடுத்து வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.