முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் 8-ம் தேதி முதல் தொடங்கும் - அண்ணா பல்கலைக்கழகம்

முதலாமாண்டு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் வரும் 8-ம் தேதி முதல் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த கல்வி நிறுவனங்கள், தற்போது தொற்று பரவல் குறைய தொடங்கி உள்ள நிலையில் திறக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் முதலாமாண்டு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் வரும் 8-ம் தேதி முதல் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், B.E., B.Tech., B.Arch., M.Arch. முதலாமாண்டு மாணவர்களுக்கு வரும் 8-ம் தேதியும், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் மார்ச் 15-ம் தேதியும், மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஏப்ரல் 5-ம் தேதியும் தொடங்கும் என்றும், M.E., M.Tech., MBA, MCA, M.Sc. முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் மார்ச் 8-ம் தேதி தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com