1.5 பவுன் தங்க செயினை உரியவரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு குவியும் பாராட்டு

பெண் தொழிலாளியின் நேர்மையான செயலை மருத்துவமனை நிர்வாகம் மட்டுமின்றி எல்லோரும் பாராட்டினார்கள்.
1.5 பவுன் தங்க செயினை உரியவரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு குவியும் பாராட்டு
Published on

சென்னை,

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு புறநோயாளியாக வந்த பெண் ஒருவர் இன்று தனது ஒன்றரை பவுன் தங்க செயினை தொலைத்துவிட்டார். தற்போது, தங்கம் விற்கும் விலையில் செயினை இழந்த அவர் மருத்துவமனை முழுவதும் தேடிப்பார்த்தும் செயின் கிடைக்கவில்லை.

இவ்வளவு நோயாளிகள் வந்து செல்லும் இடத்தில் எப்படி தொலைந்த தங்க செயின் எப்படி கிடைக்கும் என்று அவர் நம்பிக்கை இழந்த நிலையில், அங்கு துப்புரவு பணியை மேற்கொண்ட மாஜ்மா என்ற பெண்ணின் கண்களில் அந்த செயின் தென்பட்டது. பொன்னைக்கண்டு மயங்காத அந்த பெண், நேர்மையுடன் மருத்துவமனை நிர்வாகத்திடம் அந்த தங்க செயினை ஒப்படைத்தார்.

உலக மகளிர் தின நாளில், இந்த துப்புரவு பெண் தொழிலாளியின் இந்த நேர்மையான செயலை மருத்துவமனை நிர்வாகம் மட்டுமல்ல, அங்கு வந்த எல்லேரும் பாராட்டினார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com