ரெயில் நிலையத்தில் தூய்மைப்பணி

நீடாமங்கலம் ரெயில் நிலையத்தில் தூய்மைப்பணி நடந்தது.
ரெயில் நிலையத்தில் தூய்மைப்பணி
Published on

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் பூண்டி புஷ்பம் கல்லூரி நாட்டுநலப்பணிதிட்ட மாணவர்கள் சார்பில் சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவையொட்டி நீடாமங்கலம் ரயில்நிலைய வளாகத்தில் தூய்மைப்பணி நடந்தது. ரயில்நிலைய வளாகத்தில் நடைமேடைகளில் மண்டிக்கிடந்த புல் செடிகளை பூண்டி புஷ்பம் கல்லூரி நாட்டுநலப்பணி திட்ட மாணவர்கள் அகற்றினர். இதில் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி ராதாகிருஷ்ணன், ரயில்நிலைய மேலாளர் நர்சிலால்மீனா, பூண்டி புஷ்பம் கல்லூரி நாட்டுநலத்திட்டப்பணி அலுவலர் பேராசிரியர் பெரியதம்பி மற்றும் நாட்டுநலத்திட்ட மாணவர்கள் 25 பேர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com