தலைஞாயிறு, கீழ்வேளூரில் தூய்மைப்பணி

காந்தி ஜெயந்தியையொட்டி தலைஞாயிறு, கீழ்வேளூரில் தூய்மைப்பணி நடந்தது.
தலைஞாயிறு, கீழ்வேளூரில் தூய்மைப்பணி
Published on

சிக்கல்:

கீழ்வேளூர்

மத்திய அரசு காந்தி ஜெயந்தியையொட்டி தூய்மையே சேவை நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவித்தது. அதன்படி நாடு முழுவதும் தூய்மைப்பணி நடந்தது. கீழ்வேளூர் பேரூராட்சி சார்பில் கீழ்வேளூர் ரயில் நிலையம் செல்லும் சாலையில் தூய்மைப்பணி நடந்தது.

இதில் பேரூராட்சி செயல் அலுவலர் குகன், பேரூராட்சி தலைவர் இந்திராகாந்தி, துணை தலைவர் சந்திரசேகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இங்கு சேகரிக்கப்பட்ட குப்பைகள் மறுசுழற்சிக்காக கீழ்வேளூர் பேரூராட்சி அலுவலகம் கொண்டு செல்லப்பட்டது.

தலைஞாயிறு

தலைஞாயிறு பேரூராட்சி 15 வார்டுகளில் தூய்மைப்பணி நடந்தது. இந்த பணியை பேரூராட்சி தலைவர் செந்தமிழ்ச்செல்வி பிச்சையன் தொடங்கி வைத்தார்.பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன், இளநிலை உதவியாளர் குமார் மற்றும் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள், பரப்புரையாளர்கள், ஊழியர்கள் உள்பட பலர் அனைத்து பகுதிகளிலும் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.மேலும் பேரூராட்சி வளாகத்தில் பேரூராட்சி ஊழியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் தூய்மை பணிக்கான உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

வேதாரண்யம்

கடலோர பாதுகாப்பு குழுமத்தின் துணை சூப்பிரண்டு சுந்தர் தலைமையில் வேதாரண்யம் கடலோர பாலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிமுத்துராமலிங்கம் மற்றும் போலீசார், ஊர்காவல் படையினர் வேதாரண்யம் கடற்கரை, போலீஸ் நிலையம், துணை சூப்பிரண்டு அலுவலகம், சன்னதி கடல் கடற்கரை பகுதியில் தூய்மைப்பணியை மேற்கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com