செங்கோட்டையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்

செங்கோட்டையில் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கோட்டையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்
Published on

செங்கோட்டை:

செங்கோட்டை நகராட்சி வளாகத்தில் தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த செங்கோட்டை நகராட்சி முன்னாள் தலைவரும், நகர்மன்ற உறுப்பினருமான எஸ்.எம்.ரஹீம் தலைமையில் தூய்மை பணியாளர்கள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி வேல்முருகன் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து ஒப்பந்ததாரரிடம் பேசி விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. பேச்சுவார்த்தையின் போது நகராட்சி ஆணையாளர் சுகந்தி, சுகாதார ஆய்வாளர் மாதவராஜ் குமார் மற்றும் போலீசார், நகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com