

சென்னை,
சோழிங்கநல்லூர் மண்டலம், கண்ணகி நகர் குடியிருப்புப் பகுதியில் இன்று மேற்கொள்ளப்பட்ட தீவிர தூய்மைப்பணி, கொசு ஒழிப்புப் பணி, தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தும் பணி, மின்சாதனப் பொருட்கள் அகற்றும் பணிகளை தெற்கு வட்டார துணை ஆணையர் அதாப் ரசூல், தொடங்கி வைத்துப் பணிகளை ஆய்வு செய்தார்.
சென்னை மாநகராட்சி, சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு-196க்குட்பட்ட கண்ணகி நகர் குடியிருப்புப் பகுதியில் தீவிர தூய்மைப்பணி மற்றும் கொசு ஒழிப்புப் பணி, தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தும் பணி, மின்சாதன பொருட்கள் அகற்றும் பணி இன்று 31.10.2026 நடைபெற்றது. இந்த பணியை தெற்கு வட்டார துணை ஆணையர் அதாப் ரசூல், தொடங்கி வைத்து ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது கண்காணிப்பு பொறியாளர்முரளி, மண்டல அலுவலர் லோகேஸ்வரன், செயற்பொறியாளர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள், மண்டல நல அலுவலர், இளநிலை பூச்சியியல் வல்லுநர், துப்புரவு அலுவலர், சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த தீவிர தூய்மை பணியில் சுமீத் எல்கோ நிறுவனத்தை சார்ந்த 25 தூய்மை பணியாளர்கள் மற்றும் பிரீமியர் நிறுவனத்தின் சார்பில் 16 தூய்மைப் பணியாளர்கள், கொசு ஒழிப்பு பணி மேற்கொள்வதற்கு 5 பணியாளர்கள், வாகனம் மூலம் புகைப்பரப்பும் பணி மேற்கொள்வதற்கு 2 பணியாளர்கள், மருந்து தெளிக்கும் பணிகளை மேற்கொள்வதற்கு 5 பணியாளர்கள் மற்றும் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்துவதற்கு 13 பணியாளர்கள் ஆகியோர் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த சிறப்பு தூய்மைப்பணி மற்றும் கொசு ஒழிப்பு பணியின் கீழ், மொத்தம் 42 தெருக்களில் உள்ள 5,800 வீடுகள் உள்ளடக்கப்பட்டு, தீவிர தூய்மைப்பணி, கொசு ஒழிப்பு பணி மற்றும் தேவையற்ற பொருட்கள், மின்சாதன பொருட்களை அகற்றும் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டன.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.