பழவேற்காடு கடற்கரையில் தூய்மை பணி

பழவேற்காடு கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது.
பழவேற்காடு கடற்கரையில் தூய்மை பணி
Published on

பொன்னேரி அடுத்த லைட்ஹவுஸ்குப்பம் ஊராட்சி பகுதியில் பழவேற்காடு கடற்கரை உள்ளது. இந்த கடற்கரையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருவர். இந்த கடற்கரையில் சுற்றுலா பயணிகள் கொண்டு செல்லும் தின்பண்டங்களின் கவர்கள், தண்ணீர் பாட்டில்கள், குப்பைகளை அங்கேயே போட்டுவிட்டு செல்வர். இந்த குப்பைகள் காற்றில் பறந்து கடலில் விழும் நிலை ஏற்படுகிறது. இதனால் கடற்கரையின் மாசு ஏற்படுகிறது. இதனை அறிந்த பொன்னேரி வருவாய் துறையினர் கடற்கரையில் மாசு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று பழவேற்காடு கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. இதற்கு பயிற்சி கலெக்டர் கேத்ரின் சரண்யா தலைமை தாங்கி கடற்கரை தூய்மை பணிகளை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பொன்னேரி தாசில்தார் செல்வகுமார், மீஞ்சூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர், ஒன்றிய கவுன்சிலர் செல்வழகி எர்ணாவூரான், லைட்அவுஸ்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் கஜேந்திரன் வருவாய்த்துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து பயிற்சி கலெக்டர் பழவேற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com