அலையாத்திக்காட்டில் தூய்மை பணி

முத்துப்பேட்டை அலையாத்திக்காட்டில் வனத்துறை சார்பில் நடந்தது தூய்மை பணி நடந்தது.
அலையாத்திக்காட்டில் தூய்மை பணி
Published on

முத்துப்பேட்டை:

முத்துப்பேட்டையை அடுத்த ஜாம்புவானோடை அலையாத்திகாட்டுக்கு செல்லும் படகுத்துறை அருகே, வனத்துறை சார்பில் மாவட்ட வனஅலுவலர் ஸ்ரீகாந்த் உத்தரவின்படி அலையாத்திகாடு மற்றும் சதுப்பு நிலப்பகுதியில் தூய்மை பணிகள் நடைபெற்றது. இதற்கு வனச்சரக அலுவலர் ஜனனி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் லதா பாலமுருகன், துணைத்தலைவர் ராமஜெயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூய்மை பணியை பேரூராட்சி மன்ற தலைவர் மும்தாஜ் நவாஸ்கான் தொடங்கி வைத்தார். காலை முதல் மாலை வரை நடந்த இந்த பணியில் ஊராட்சி பணியாளர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்று லகூன் சாலை படகு துறை கோரையாறு கரையோரம் மற்றும் அலையாத்தி மரங்களுக்கு இடையே கிடந்த கழிவு பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை அகற்றினர்.

அதேபோல் முத்துப்பேட்டையை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயத்தில் வனத்துறை சார்பில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த பணியை வனச்சரக அலுவலர் ஜனனி தொடங்கி வைத்தார். இதில் அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்று சரணாலயத்திலும், அதில் உள்ள ஏரியிலும் கிடந்த குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து அப்புறப்படுத்தினர். இதில் வனக்காப்பாளர்கள் மற்றும் வனக்காவலர்கள் உள்ளிட்ட வனத்துறையினர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com