புளியங்குடியில் தூய்மை பணி

புளியங்குடியில் தூய்மை பணிகள் நடைபெற்றது.
புளியங்குடியில் தூய்மை பணி
Published on

புளியங்குடி:

புளியங்குடி நகராட்சி சார்பில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தூய்மையே சேவை திட்டம் பெரிய பள்ளிவாசல் முன்பு நகராட்சி சேர்மன் விஜயா சவுந்தரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி துணை தலைவர் அந்தோணிசாமி, நகராட்சி சுகாதாரத்துறை ஆய்வாளர் கணேசன் மற்றும் புளியங்குடி நகர்மன்ற உறுப்பினர்கள் மு.ஷேக் காதர் மைதீன், மு.முகம்மது நயினார், ஆர்.அப்துல் காதர், முகைதீன் அப்துல் காதர், பொன்னுத்துரைச்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தென்காசி மாவட்ட முதன்மை துணைத் தலைவர் ஏ.அப்துல் வகாப், நகரத்துணை தலைவர் பத்திரம் பாதுஷா மற்றும் தூய்மை பணியாளர்கள், தன்னார்வலர்கள் பொதுமக்கள் ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com