அச்சரப்பாக்கம் அருகே கார் மோதி தூய்மை பணியாளர் சாவு

அச்சரப்பாக்கம் அருகே கார் மோதி தூய்மை பணியாளர் பரிதாபமாக இறந்தார்.
அச்சரப்பாக்கம் அருகே கார் மோதி தூய்மை பணியாளர் சாவு
Published on

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் பேரூராட்சியில் பணியாற்றி வந்தவர் ஏழுமலை (வயது 47). தூய்மை பணியாளர். இவர் பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் சொந்த ஊரான கடமலைபுத்தூர் கிராமத்துக்கு சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அச்சரப்பாக்கத்தை அடுத்த அரப்பேடு என்ற இடத்தில் செல்லும்போது இவரது மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது.

இதில் ஏழுமலை சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து

அச்சரபப்பாக்கம் போலீசார் வழக்குபபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விபத்து ஏற்படுத்திய சொகுசு காரை போலீசார் கைப்பற்றினர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com