போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதை தவிர்க்க இரவு நேரத்தில் தூய்மை பணிகள் - சென்னை மாநகராட்சி நடவடிக்கை

போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதை தவிர்க்க இரவு நேரத்தில் தூய்மை பணிகளை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதை தவிர்க்க இரவு நேரத்தில் தூய்மை பணிகள் - சென்னை மாநகராட்சி நடவடிக்கை
Published on

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பஸ்கள் செல்லும் சாலைகளிலும், உட்புற சாலைகளிலும் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் இரவு நேரங்களில் தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது. தூய்மை பணிகள் மேற்கொள்ளும்போது, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், சுமார் 569.28 கிலோ மீட்டர் நீளமுள்ள 501 எண்ணிக்கையிலான பஸ்கள் செல்லும் சாலைகள் மற்றும் இதர முக்கிய சாலைகளில் பேட்டரியால் இயங்கும் 633 வாகனங்கள் மற்றும் 10 டிப்பர் லாரிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2,187 தூய்மை பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு இரவு நேர தூய்மை பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இரவு நேரங்களில் மேற்கொள்ளப்படும் தூய்மை பணிகளை தீவிரப்படுத்த மாநகராட்சியின் உயர் அலுவலர்களை சுழற்சி முறையில் நியமித்து இந்த பணிகளை கண்காணித்து மேலும் துரிதப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com