

ஊத்தங்கரை
ஊத்தங்கரை அடுத்த கதவணி ஊராட்சி அருணபதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்ட ஓராண்டு நிறைவு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோதி தலைமை தாங்கினார். விழாவில் ஊர் பிரமுகர் சேகர் செட்டியார், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சிவக்குமார், எஸ்.எம்.சி. தலைவி ராஜேஸ்வரி, வடமலை, சிவானந்தம், பாஸ்கரன், துணைத்தலைவர் பிரியா, பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து பள்ளி மாணவர்களின் நடனம், பேச்சுப்போட்டி, வாசிப்பு போட்டிகள் நடைபெற்றது. 1 முதல் 3-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளியின் சார்பாக பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மகேஸ்வரி, மாதேஸ்வரி, லதா, தீபா, கெஜலட்சுமி, ஜீவா மற்றும் பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.