திருவாரூரில் 21-ந்தேதி மதுக்கடைகள் மூடல்

திருவாரூர் கோவில் ஆழித் தேரோட்டம் வருகிற 21ஆம் தேதி நடைபெற உள்ளது.
திருவாரூரில் 21-ந்தேதி மதுக்கடைகள் மூடல்
Published on

திருவாரூர்,

உலக புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர விழாவையொட்டி ஆழித்தேரோட்டம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடத்திற்கான ஆழித் தேரோட்டம் வருகிற 21ஆம் தேதி நடைபெற உள்ளது. 300 டன் எடை கொண்ட இந்தத் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் செல்வர்.

இந்த தேர் திருவிழாவை முன்னிட்டு திருவாரூரில் வருகிற 21 ஆம் தேதி மதுக்கடைகள் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

"உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவில் ஆழித்தேர் திருவிழா மார்ச் 21 ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு திருவாரூர் நகர் பகுதியில் செயல்படும் மது கடைகள், மதுக்கூடங்கள், தனியார் மதுக்கூடங்கள்  ஆகியவற்றிற்கு ஒரு நாள் விடுமுறை தினமாக அறிவித்து அவற்றை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி செயல்படும் மதுபான கடைகள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com