தூத்துக்குடி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல்

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மறுநாள் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல்
Published on

மே தினத்தை முன்னிட்டு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி அனைத்து அரசு மதுபான கடைகள், பார்கள் மூடப்பட்டு இருக்க வேண்டும். அன்றைய தினம் மதுபான விற்பனை தடை செய்யப்பட்டு உள்ளதால் மதுபானம் விற்பனை நடைபெறக் கூடாது.

மேலும் அன்றைய தினத்தில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்க சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com