ஈரோட்டில் நிவாரண பொருட்களை மக்களுக்கு முதல் அமைச்சர் வழங்கினார்

ஈரோட்டில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல் அமைச்சர் பழனிசாமி நிவாரண பொருட்களை இன்று வழங்கினார்.
ஈரோட்டில் நிவாரண பொருட்களை மக்களுக்கு முதல் அமைச்சர் வழங்கினார்
Published on

பவானி,

ஈரோட்டில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழையால் பவானி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து வெள்ள நீர் பவானி பகுதியில் உள்ள கிராமங்கள், குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. இந்த நிலையில், வெள்ளத்தில் பாதிப்படைந்த பகுதிகளில் முதல் அமைச்சர் பழனிசாமி இன்று அமைச்சர்களுடன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

அவர் பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தினை ஆய்வு செய்துள்ளார். பவானி குடியிருப்பு பகுதிகளுக்கும் அமைச்சர்களுடன் சென்று அவர் ஆய்வு செய்துள்ளார்.

முதல் அமைச்சர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் சென்றுள்ளனர். அதன் பின்னர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு வேட்டி, சேலை, உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றை அவர் வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com