பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 64 காவலர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

தமிழகத்தில் உடல்நலக்குறைவு, விபத்துகளில் உயிரிழந்த 64 காவலர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 64 காவலர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
Published on

சென்னை,

தமிழகத்தில் பணியின் போது பல்வேறு சம்பங்களில் உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே 100க்கும் மேற்பட்ட போலீசாரின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் தமிழகத்தில் உடல்நலக்குறைவு, விபத்துகளில் இறந்த மேலும் 64 போலீசாரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் விபத்து மற்றும் உடல்நலக்குறைவால் உயிரிழந்த காவலர்கள் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com