பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரபலங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி!

பிறந்தநாள் வாழ்த்து கூறிய தலைவர்கள், பொதுமக்கள் மற்றும் பிரபலங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.
பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரபலங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி!
Published on

சென்னை,

தமிழக முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு இன்று 69-வது பிறந்தநாள் ஆகும். அவர், தமிழக முதல்-அமைச்சராக பதவி ஏற்ற பின்னர் கொண்டாடும் முதல் பிறந்தநாள் என்பதால் தி.மு.க.வினர் உற்சாகமாக கொண்டாடினர்.

இன்று காலை முதலே, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அரசியல், சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இதனையடுத்து, பிறந்தநாள் வாழ்த்து கூறிய தலைவர்கள், பொதுமக்கள் மற்றும் பிரபலங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.

அவர் தனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அகிலேஷ் யாதவ், கி.வீரமணி, சந்திரசேகர் ராவ், ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு, ஹேமந்த் சோரென், அரவிந்த் கெஜ்ரிவால், நிதின் கட்காரி, ரஜினிகாந்த், திருமாவளவன், விஜயகாந்த், அன்புமணி ராமதாஸ், தமிழிசை சவுந்தரராஜன், எல்.முருகன், அண்ணாமலை, சீமான், சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலருக்கும் ஆஸ்திரேலிய தூதரகத்துக்கும் தன் நன்றியை டுவிட்டர் வாயிலாக தெரிவித்துள்ளார்.

அவர் பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார்.

அவர் பிறந்தநாள் வாழ்த்து கூறிய பினராயி விஜயனுக்கு நன்றி தெரிவித்தார். அவர் தனது டுவிட்டர் பதிவில், நன்றி தோழரே! என்று மலையாளத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் பிறந்தநாள் வாழ்த்து கூறிய ஒமர் அப்துல்லாவுக்கு நன்றி தெரிவித்தார். அவர் தனது டுவிட்டர் பதிவில், நேற்றைய தினம் உங்களின் உணர்வுபூர்வமான மற்றும் புத்திசாலித்தனமான சொற்பொழிவு என்னை மிகவும் கவர்ந்தது என்று பதிவிட்டுள்ளார்.

அவர் பிறந்தநாள் வாழ்த்து கூறிய தேஜஸ்வி யாதவுக்கு நன்றி தெரிவித்தார். அவர் தனது டுவிட்டர் பதிவில், அன்பு சகோதரருக்கு நன்றி! உங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கும், சமூக நீதி பற்றிய எனது பார்வையை பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி! என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com