முதல்-அமைச்சர் வருகை: மதுரையில் நாளை டிரோன்கள் பறக்க தடை

அலங்காநல்லூரில் நாளை நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்து பார்வையிடுகிறார்.
முதல்-அமைச்சர் வருகை: மதுரையில் நாளை டிரோன்கள் பறக்க தடை
Published on

மதுரை,

பெங்கல் பண்டிகையின்போது மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பேட்டிகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. நேற்று அவனியாபுரத்திலும், இன்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு விமரிசையாக நடைபெற்ற நிலையில் நாளை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.

இந்நிலையில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மதுரைக்கு வருகை தர உள்ளார். மதுரை அலங்காநல்லூரில் நாளை நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்து பார்வையிடுகிறார்.

இதனையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரையில் நாளை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி மதுரை விமான நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை டிரோன்கள் பறக்க தடை விதித்து மதுரை மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com