மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு

மின்கம்பத்தில் டிராக்டர் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்தனர்.
முதல்-அமைச்சர் விஜய்
கோப்புப்படம்
Published on: 

சென்னை,

திருவாரூர் மாவட்டம், புதூர் கிராமத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

திருவாரூர் மாவட்டம், புதூர் கிராமத்தைச் சேர்ந்த ஆதித்யன் (வயது 21), மற்றும் ராஜா (வயது 49) ஆகியோர் கடந்த 5.10.2026 அன்று விவசாயக் கூலி வேலைக்காக நஞ்சை நிலத்தில் டிராக்டர் மூலம் உழுது கொண்டிருந்தபோது, உயர் அழுத்த மின்பாதை மின்கம்பத்தில் எதிர்பாராத விதமாக டிராக்டர் மோதியதில் மின்கம்பத்தில் இருந்த ‘வீ கிராசாரம்’ மின்கம்பியுடன் டிராக்டர் மீது விழுந்ததில், டிராக்டர் ஓட்டிக்கொண்டிருந்த ஆதித்யன் மீது மின்சாரம் பாய்ந்ததோடு, அருகில் வேலை செய்துகொண்டிருந்த அவரது தந்தை ராஜா, அவரைக் காப்பாற்ற முயன்றபோது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்ததில், இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா மூன்று லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X