

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலில் 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக விஜய்யின் தவெக உருவாகி உள்ளது. இதையடுத்து திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவில் விஜய் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
இந்தநிலையில், கேரளா தம்பதி முதல்-அமைச்சர் விஜய்யை பார்க்க நடைப்பயணமாக புறப்பட்டுள்ளனர். கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ரபி. இவரது மனைவி சஹானா. இவர்கள் 2 பேரும் விஜய்யின் தீவிரமான ரசிகர்கள். விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கியது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து சமூக வலைளதங்களில் விஜய்யின் தவெகவை ஆதரித்து பதிவுகள் செய்து வந்தனர். குறிப்பாக ரபி தனது பல வீடியோக்களில் விஜய் நிச்சயம் தமிழகத்தின் முதல்- அமைச்சர் ஆவார். இல்லாவிட்டால் மொட்டையடிப்பதாக தெரிவித்து இருந்தார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் விஜய்யின் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனால் அவர்கள் மிகுந்த சந்தோஷம் அடைந்தனர். விஜய் மீது வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை என்று அவர் மகிழ்ச்சியோடு வீடியோ வெளியிட்டனர்.
இதையடுத்து விஜய்யை எப்படியாவது நேரில் சந்திக்க விரும்பினர். அதோடு கேரளாவில் இருந்து நடந்தே வந்து விஜய்யை பார்க்க முடிவு செய்தனர். இதையடுத்து கடந்த 7 ம் தேதி மலப்புரத்தில் இருந்து அவர்கள் விஜய்யை பார்க்க புறப்பட்டனர். நடந்தே சென்னை புறப்பட்டு வருகின்றனர்.
அவர்கள் விஜய்யை சந்திக்க நடந்து வருவதை தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். சாலையில் நடந்து வருவது, நடக்கும் வழியில் விஜய் ரசிகர்களுடன் கலந்துரையாடுவது, இரவில் கூடாரம் அமைத்து தங்குவது உள்ளிட்டவற்றை அவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். தற்போது இந்த வீடியோ டிரெண்டாக தொடங்கியுள்ளது.
இந்தநிலையில், கழுத்தில் முதல்-அமைச்சர் விஜய் படம். வெயிலுக்கு தவெக கொடி நிறத்தில் ஒரு கொடை. கேரள மாநிலம் மணப்பூர் பகுதியில் வாழும் ரபி, சஹானா தம்பதியான இவர்கள், சிறுவயது முதலே முதல்-அமைச்சர் விஜயை நேசித்துள்ளனர். அவரை ஒருமுறையாவது நேரில் பார்ப்பது அவர்களது கனவாம்.
தற்போது அவர் முதல்-அமைச்சரான பின் கேரளத்தில் இருந்து அவரை பார்க்க சென்னை வரை நடந்தே செல்ல முடிவெடுத்துள்ளனர். சுமார் 500 கிலோமீட்டரை 32 நாட்களாக கடந்த இவர்கள், தற்போது மதுராந்தகத்தை கடந்து சென்னையை நோக்கி வருகின்றனர். இன்னும் ஒரு சில நாட்களில் முதல்-அமைச்சர் விஜயை சந்தித்து பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.