மக்களை சந்திப்பதற்காக முதல்-அமைச்சர் விஜய் விரைவில் திருச்சி வருகை

வாக்காளர்களுக்கு நன்றி சொல்ல விரைவில் திருச்சி வருகை தர உள்ளார்.
மக்களை சந்திப்பதற்காக முதல்-அமைச்சர் விஜய் விரைவில் திருச்சி வருகை
Published on

திருச்சி,

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவர் கு.ப.கிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது;

திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழக முதல்-அமைச்சர் விஜய், வாக்காளர்களுக்கு நன்றி சொல்ல விரைவில் திருச்சி வருகை தர உள்ளார். மேகதாதுவில் அணைகட்ட தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. தொண்டர்களால் தேர்வு செய்யப்படுபவரே அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக இருக்க முடியும். அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் கிடையாது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வது. அவர்களுடைய சொந்த விருப்பம். அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம், தற்பொழுது கட்சியில் சேர்ந்தவர்களுக்கு மீண்டும் எம்.எல்.ஏ. சீட்டு வழங்கப்படுமா என்பதை தலைமை தான் முடிவு செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com