சிஎம்ஆர்எல் பயண அட்டை பயன்பாட்டிலிருந்து முழுமையாக சிங்கார சென்னை அட்டைக்கு மாற்றம்

மே 1-ந்தேதி முதல் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் “சிங்கார சென்னை அட்டைக்கு” முழுமையாக மாற திட்டமிட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் பயண அட்டை (CMRL Travel Card) பயன்பாட்டிலிருந்து முழுமையாக சிங்கார சென்னை அட்டைக்கு (தேசிய பொது போக்குவரத்து அட்டை) மாற்றப்படுவதாக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், மெட்ரோ ரெயில்களில் பயணிக்க சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் பயண அட்டையுடன் கூடுதலாக 14.04.2023 முதல் “சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது போக்குவரத்து அட்டை)” அறிமுகப்படுத்தியது. இந்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி, இந்தியா முழுவதும் உள்ள பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் தடையற்ற பயணத்தை உறுதி செய்யும் வகையில், 01.05.2026 முதல் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் “சிங்கார சென்னை அட்டைக்கு (தேசிய பொது போக்குவரத்து அட்டை)” முழுமையாக மாற திட்டமிட்டுள்ளது.

எனவே, மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்யவும், மெட்ரோ வாகன நிறுத்தங்களை பயன்படுத்தவும், பயணிகள் தங்களது பழைய பயண அட்டையில் மீதமுள்ள தொகையை, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மொபைல் செயலி (Mobile App) மூலம் பெறப்படும் QR Stored Value Pass (SVP) அல்லது தேசிய பொது போக்குவரத்து அட்டைக்கு மாற்றிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அனைத்து பயணிகளுக்கும் பாதுகாப்பான, நம்பகமான பயண அனுபவத்தை வழங்க சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் உறுதியுடன் உள்ளது. இதனால் ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறோம். உங்கள் மேலான ஆதரவைத் தொடர்ந்து எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com