நிலக்கரி இருப்பு குறைவு: தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

நிலக்கரி இருப்பு குறைவு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கூறினார்.
நிலக்கரி இருப்பு குறைவு: தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி
Published on

கரூர்,

கரூரில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

வடசென்னை அனல் மின்நிலையத்தில் நிலக்கரி இருப்பு குறைந்திருப்பதாக வாரியத்திற்கு தகவல் கிடைக்க பெற்றவுடன் கடந்த 2-ந் தேதி 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்தக்குழு 6 மற்றும் 9-ந்தேதிகளில் ஆய்வு செய்து 2 லட்சத்து 38 ஆயிரம் டன் நிலக்கரி இருப்பு குறைந்திருப்பதை கண்டறிந்தது.

நான் வெளியிட்ட அறிக்கையில் குழு அமைக்கப்பட்டதற்கான நகலும், அந்த குழுவின் அறிக்கை நகலும் வெளியிட்டு இருக்கிறேன்.

அறிக்கையின் நகல்

ஆனால், அ.தி.மு.க. ஆட்சியில் இந்த துறையை நிர்வகித்தவர் ஏதோ அவர்கள் அமைத்த குழு எடுத்த அறிக்கைதான் இது என்கிறார். தற்போது நான் கூறி 2 நாட்கள் ஆகிறது. அவர்கள் குழு அமைத்து இருந்தால் அந்த குழுவினுடைய நகலை வெளியிட்டு இருக்க வேண்டும். அதேபோல் அந்த குழுவின் அறிக்கையையும் வெளியிட்டு இருக்க வேண்டும். அவர்கள் எந்த தேதியில் குழு அமைத்தார்கள், எந்த தேதியில் குழு ஆய்வுக்கு சென்றது? அந்த குழுவினுடைய ஆய்வு அறிக்கை என்ன? அப்படி அவர்கள் அமைத்த குழு ஆய்வு செய்து அறிக்கை கொடுத்து இருந்தால் ஏன் அவர்கள் ஆட்சியில் இருக்கின்றபோது தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த ஆட்சியில் தவறுகள் தெரிந்தும் யாரை காப்பாற்றுவதற்கு உண்டான முயற்சி. கடந்த ஆட்சியில் அவர்கள் செய்த தவறுகள் இப்போது கண்டறியப்பட்டு, அது எந்த துறையாக இருந்தாலும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், நிச்சயமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கூடுதல் கட்டணம்

இயக்குனர் தங்கர்பச்சான் கட்டண கொள்ளை என்று கூறியிருக்கிறார். அவரது வீட்டிற்கு உயர்அதிகாரிகள் சென்று ஆய்வு செய்தனர். அவருக்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்படவில்லை. தாங்கள் பயன்படுத்திய மின்சாரத்தின் யூனிட்டிற்கு கட்டணங்கள் நிர்ணயிக்கப்படுகிறது. அந்த அடிப்படையில் தான் கட்டணங்கள் செலுத்தப்படுகிறது. அப்படி இருக்கையில் கட்டண கொள்ளை எங்கே இருந்து வருகிறது.

கடந்த காலங்களில் என்ன கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதோ அந்த கட்டணம் தான் வசூலிக்கப்படுகிறது. அதைதான் நான் சட்டமன்றத்தில் தெளிவாக கூறினேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com