கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் -மீனவர்கள் கலந்துரையாடல்

கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் -மீனவர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.
கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் -மீனவர்கள் கலந்துரையாடல்
Published on

வாய்மேடு அடுத்த பன்னாள் மீனவ கிராம பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் மற்றும் மீனவர்கள் இடையேயான கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு வேதாரண்யம் கடலோர காவல் குழும இன்ஸ்பெக்டர் ஜோதிமுத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். கிராம பஞ்சாயத்தார்கள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பேசிய கடலோர காவல் குழும இன்ஸ்பெக்டர், 'கடற்கரை பகுதியில் அந்நியர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். மீன் பிடி தொழிலுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களுடன் செல்ல வேண்டும். 14 வயதுக்கு உட்பட்டவர்களை தொழிலுக்கு அழைத்துச்செல்ல கூடாது' என்றார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com