ரூ.13 லட்சத்திற்கு கொப்பரை தேங்காய் ஏலம்

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.13 லட்சத்திற்கு கொப்பரை தேங்காய் ஏலம் போனது.
ரூ.13 லட்சத்திற்கு கொப்பரை தேங்காய் ஏலம்
Published on

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. ஆனைமலை ஒன்றியத்தில் உள்ள 68 விவசாயிகள் 426 மூட்டைகளில் கொப்பரை தேங்காயை பொது ஏலத்தில் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தனர். காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கொப்பரை தேங்காய்களை தரம் பிரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.

தாராபுரம், காங்கேயம், கேரளா மாநிலத்தைச் சேர்ந்த 9 வியாபாரிகள் பொது ஏலத்தில் கலந்து கொண்டனர்.

இதில் 248 மூட்டை முதல் ரக கொப்பரை கிலோ ஒன்று 73 ரூபாய் முதல் 81 ரூபாய் வரை ஏலம் விடப்பட்டது. 178 மூட்டை 2-ம் ரக கொப்பரை கிலோ ஒன்று 48 ரூபாய் 69 காசு முதல் 68 ரூபாய் 33 காசு வரை ஏலம் விடப்பட்டது. கடந்த வாரத்தைவிட 48 மூட்டைகள் வரத்து குறைந்துள்ளது. கிலோவிற்கு 2 ரூபாய் 49 காசுகள் விலை அதிகரித்துள்ளது. மொத்தமாக ரூ.13 லட்சத்து 610-க்கு கொப்பரை தேங்காய் ஏலம் போனது.

இந்த தகவலை ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் செந்தில் முருகன் தெரிவித்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com