இறுதி ஊர்வலத்தில் சேவல் சண்டை... தடுக்க வந்த போலீஸ் மீது கடும் தாக்குதல்.. சென்னையில் பரபரப்பு

சென்னை அயனாவரத்தில் இறந்தவரின் இறுதி ஊர்வலத்தின் போது, போலீசாரை தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இறுதி ஊர்வலத்தில் சேவல் சண்டை... தடுக்க வந்த போலீஸ் மீது கடும் தாக்குதல்.. சென்னையில் பரபரப்பு
Published on

சென்னை,

சென்னை அயனாவரம் பகுதியில் நடைபெறும் இறுதி ஊர்வலத்தால், போக்குவரத்துக்கு கடும் இடையூறு ஏற்படுவதாக போலீசாருக்கு புகார் வந்துள்ளது. இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, இறந்தவரின் உறவினர்கள் சாலையை மறைத்து சேவல் சண்டை நடத்தியது தெரியவ வந்தது.

இதனை காவலர் திருநாவுக்கரசு வீடியோ எடுத்தபோது, ஊர்வலத்தில் வந்தவர்கள் அவரை தாக்கியுள்ளனர். தடுக்க சென்ற பெண் உதவி ஆய்வாளர் மீனாவும் தாக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார், குணசேகரன், சஞ்சயன் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com