ரூ.27 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்

வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது.
ரூ.27 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்
Published on

வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது. அதில் லாலாபேட்டை, வாணியம்பாடி, சாணார்பட்டி, சென்னிமலை, தாராபுரம், வெள்ளியம்பாளையம் பகுதிகளை சேர்ந்த 102 விவசாயிகள் 823 மூட்டை தேங்காய் பருப்பை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

காங்கயம், முத்தூர், ஆர்.எஸ்.ஊத்துக்குளி, வெள்ளகோவில், ஈரோடு, மூலனூர், நஞ்சை ஊத்துக்குளி பகுதிகளைச் சேர்ந்த 10 வியாபாரிகள் ஏலத்தில் கலந்துகொண்டு ஏலம் எடுத்தனர். நல்ல தரமான தேங்காய் பருப்பு ஒரு கிலோ ரூ.74.88 பைசாவிற்கும், 2-ம் தர தேங்காய் பருப்பு ஒரு கிலோ ரூ.56.88 பைசாவுக்கும் ஏலம் எடுத்தனர். மொத்தம் ரூ.27 லட்சத்து 53 ஆயிரத்து 504-க்கு விற்பனை நடைபெற்றது. இந்த தகவலை ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சி.மகுடேஸ்வரன் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com