பரமத்திவேலூரில் ரூ.61 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்!

பரமத்திவேலூரில் ரூ.61 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம் போனது.
பரமத்திவேலூரில் ரூ.61 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்!
Published on

பரமத்திவேலூர்

பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் செவ்வாய்க்கிழமை தோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 3 ஆயிரத்து 846 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.21.75-க்கும், குறைந்தபட்சமாக ரூ.15.05-க்கும், சராசரியாக ரூ.19.69-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.76 ஆயிரத்து 301-க்கு வர்த்தகம் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 3 ஆயிரத்து 320 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.22.10-க்கும், குறைந்தபட்சமாக ரூ.15.10-க்கும், சராசரியாக ரூ.17.80-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.61 ஆயிரத்து 49-க்கு வர்த்தகம் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com