ரூ.2¼ லட்சத்துக்கு தேங்காய் ஏலம்

வாடிப்பட்டி அருகே ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.2¼ லட்சத்துக்கு தேங்காய் ஏலம் விடப்பட்டது.
ரூ.2¼ லட்சத்துக்கு தேங்காய் ஏலம்
Published on

வாடிப்பட்டி, 

மதுரை மாவட்ட விற்பனைக்குழு சார்பில் வாடிப்பட்டி அருகே ஆண்டிப்பட்டியில் உள்ள ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில் 11 விவசாயிகளின் 30 ஆயிரத்து 690 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டது. இதில் 17 வியாபாரிகள் பங்கு பெற்றனர். இந்த ஏலத்தில் அதிகபட்சமாக ஒரு தேங்காய் ரூ.9-க்கும், குறைந்தபட்சமாக ரூ.6.25-க்கும் சராசரியாக ரூ.7.35-க்கும் ஏலம் போனது. இதனால் ரூ.2 லட்சத்து 23 ஆயிரத்து 521-க்கு தேங்காய் வர்த்தகம் நடந்தது.

மேலும் 6 விவசாயிகளின் 1,707 கிலோ கொப்பரை தேங்காய் ஏலம் விடப்பட்டது. இதில் 6 வியாபாரிகள் பங்கேற்று அதிகபட்சமாக ஒரு கிலோ கொப்பரை ரூ.81.15-க்கும், குறைந்த பட்சமாக ரூ.47.10-க்கும், சராசரியாக ரூ.70-க்கும் ஏலம் போனது. இதனால் ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்து 939-க்கு கொப்பரை தேங்காய் வர்த்தகம் நடந்தது. இந்த தகவலை வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் மேற்பார்வையாளர் அபிநயா தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com