கொப்பரை தேங்காய் கொள்முதல் தொடக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் பரமத்திவேலூர், திருச்செங்கோடு மற்றும் நாமகிரிப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் கொப்பரை தேங்காய் கொள்முதல் தொடங்கி இருப்பதாக கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்து உள்ளார்.
கொப்பரை தேங்காய் கொள்முதல் தொடக்கம்
Published on

கொப்பரை தேங்காய்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவும், அவர்களின் வருவாயை பெருக்கவும் தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. தென்னை சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் கொப்பரை தேங்காய் மத்திய அரசின் நாபெட் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது உள்ளூர் சந்தைகளில் கொப்பரை தேங்காய் கிலோ ஒன்றுக்கு ரூ.75 முதல் ரூ.85 வரை விற்பனை செய்யப்படுகிறது. எனவே தமிழக அரசு விவசாயிகளின் நலன் கருதி குறைந்தபட்ச ஆதரவு விலையில் கிலோ ஒன்றுக்கு அரவை கொப்பரை ரூ.108.60 மற்றும் பந்து கொப்பரை ரூ.117.50-க்கும் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

கொள்முதல் தொடக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் திட்டம் பரமத்தி வேலூர், திருச்செங்கோடு மற்றும் நாமகிரிப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாயிகள், தங்களது நிலத்தின் சிட்டா அடங்கல், ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகிய விவரங்களுடன் மேற்கண்ட 3 விற்பனைக்கூடங்களை அணுகி பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் கொப்பரை தேங்காய் விளைபொருளுக்கான தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். கொள்முதல் காலம் ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு, தற்போது கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அரசு தென்னை விவசாயிகளின் நலன் கருதி மேற்கொண்டுள்ள இத்திட்டத்தில் தென்னை விவசாயிகள் அதிகஅளவில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com